Wednesday, 7 December 2011


எரிவதில் தீபம் அழகாய்...
சுடுவதில் சூரியன் அழகாய்...

சுற்றுவதில் புவி
அழகாய்...
வளர்வதில் பிறை அழகாய்...

மின்னுவதில் விண்மீன்
அழகாய்....
தவழ்வதில் குழந்தை அழகாய்...

நடப்பதில் நதி
அழகாய்...
குதிப்பதில் அருவி அழகாய்....

உறைவதில் பனி
அழகாய்...
விளைவதில் நெற்கதிர் அழகாய்...

குளிர்ச்சியில் தென்றல்
அழகாய்...
உழைப்பதில் வியர்வை அழகாய்....

பாடுவதில் குயில்
அழகாய்....
பறப்பதில் புறா அழகாய்...

கலையினில் அறுபத்துநான்கும்
அழகாய்...
காதலில் புரிதல் அழகாய்...

உறவினில் நட்பு
அழகாய்...
மொழிகளில் என் பொன் தமிழ் அழகாய்.....

இத்தனைக்கும் இதற்கு மேலேயும்

எப்போதும்
தாய்மை அழகாய்...

1 comment:

  1. சுமார் தான் தோழர்... இன்னும் பல விஷயங்கள் பலர் பார்வையில் அழகாய் தெரிவதில்லை... அதை அழகாய் வரிசைப் படுத்தி இருக்கலாம்... எனக்கு தாய்மையை விட தகப்பன் அழகு...

    ReplyDelete