Thursday, 29 December 2011

உதட்டில் கனிந்த கவிதைகள்




தேனிற்கு ஆசைப்பட்டு வண்டுகள் மலரைத் தேடிச் செல்கின்றன,
வண்டுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னவளின் உதடுகளை என் உதட்டினுள் ஒழித்து வைத்துக் கொள்கிறேன் நான்.






 உதடுகளைப் பிரித்து நீ பேசத் தொடங்கும் போதெல்லாம்
அடை மழை பொழிகிறது உன் இரு உதடுகளுக்கும் இடையில்
சிறிது நேரம் நனைய
த் துடிக்கிறது என் உதடு...


உன் உதடுகளை கோவைப் பழத்துடன் எல்லாம் ஒப்பிட மாட்டேன்
அது கிளிக்குப் பிடித்த உணவு, உன் உதடு எனக்கு மட்டுமே.



தூரத்தில் அமர்ந்து கொண்டு பேசுகையில் இயல்பான தோற்றம் அளிக்கும் உன் உதடு
நான் அருகில் வந்து பேசுகையில் மட்டும் ரோஜாவின் மேல்
மழைத் துளி விழுந்ததைப் போன்று துடிக்கிறதே ஏன்?


எப்போதும் உன்னை நினைக்கும் வேலையை மட்டும் கொடுப்பதில்லை காதல்
அடிக்கடி உன் உதடுகளை நனைக்கும் வேலையும் சேர்த்தே கொடுக்கிறது..



எத்தனையோ வண்ணங்களைப் பூசி ரசித்துப்  பார்த்து விட்டேன் உன் உதடுகளுக்கு,
 நான் முத்தம் கொடுத்துவிட்டு பிரித்து எடுக்கும் போது ஒளிரிடும் அந்த வண்ணத்திற்கு ஈடில்லை அதில் எந்த வண்ணமும்...



புவியீர்ப்பு விசை பற்றிப் படித்துள்ளேன் (அன்று)பள்ளியில்
இதழ் ஈர்ப்பு விசையைப் பற்றிப் படிக்கிறேன் இன்று காதலில்..

No comments:

Post a Comment