Monday, 28 November 2011
கூன் விழுந்த முதுகாய் எம் குழந்தைகள்!
சுதந்திர இந்தியாவில் சுமைகளை மட்டுமே சுமக்கும் அடிமைகள்!
பட்டாம்பூச்சிகளின் படிப்புகள் எல்லாம் முதுகில் மூட்டைகளாய்....
கேவலமான கல்வியால் வளர்ந்த நிலையிலும்
கூன் விழுந்த முதுகாய் எம் குழந்தைகள்!
கூனை நிமிர்த்த முடியாமல் குறுகிப்போனது என் சமூகம்!
எதிர்காலத்தில் சுமையைத் தாங்க
நிகழ்காலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றனர்
பொதி சுமக்கும் கழுதையும் புத்தகப் பை சுமக்கும் பிள்ளைகளும்
கல்வி பயிற்றுவிப்போருக்கு ஒன்றே..
பிஞ்சிலிருந்தே பிள்ளைகளுக்கு அந்நிய மொழியை
நஞ்சாய் விதைத்து வெட்கமின்றித் தாய்மொழியைத் தவறவிட்டதில்
அம்மா (மம்மி) பிணமாகவும் அப்பா (டாடி) தண்டமாகவும்
மாறி கலாச்சாரம் இங்கு பலியாகிக் கிடக்கிறது.....
Subscribe to:
Post Comments (Atom)
படிக்கறாங்க, கற்க வில்லை... கற்றுக் கொண்டால் நாம் நிம்மதியாக இருக்கலாம்... அது நடக்க போவதுமில்லை...
ReplyDeleteஉங்களுக்கே தெரிஞ்சிருக்கும்
வீல் வச்ச புத்தக பை வந்திடுச்சுங்க..