Thursday, 8 December 2011


 



புத்தகம் இருந்தால்தான்

நூலகமா? நீ
நூலிடை கொண்ட நூலகம்..♥
 
நீ நிலாவிடம்
வருவதாக சொல்லிப்பார்...
உன்னைச் சந்திக்கும் சந்தோசத்தில்
பூமியைப் போல நிலாவும்
தனக்குத் தானே சுற்ற ஆரம்பித்துவிடும்..♥

நார்வே நாட்டில் இரவு இல்லையாம்...
இதைக்  கேட்டதும் சலிப்பே இல்லாத
உன் அன்பு முகம் தான்
ஞாபகத்திற்கு வந்தது..♥


உனக்கு இவ்வளவு தற்பெருமை ஆகாது...
எல்லோரிடமும் என் கவிதை அழகு என்கிறாய்
நீ அழகி என்று யாருக்கும் தெரியாதா..?


இரவினிலும் வானவில் தெரியுமா
என வியக்க வேண்டாம் ...
அவள், அவளுடைய
காய்ந்த துணிகளை எடுக்க
மாடி உலா வந்திருக்கிறாள்..♥

 
பசி வந்தால் பத்தும் மறந்து போகும்..!
காதல் வந்தால் அந்தப் பசியும் மறந்து போகும்..♥

 
உன் குடைக்குள் புகமுடியாமல்
தவிக்கும் மழைத்துளி போல..!
உன் இதயத்திற்குள் புகமுடியாமல்
தவிக்கும் என்னைப் போல..!
உன் நிழலுக்குள் புகமுடியாமல்
என் நிழலும் தவிக்கிறது..♥

 அது புள்ளியல்ல என் கண்கள்..!
நீ போடும் கோலத்தில்
என் கண்கள் சிக்கிக் கொண்டன..♥
 
நீ வந்து போகும் கனவில்
உன்னைப் படம் எடுத்து
உன்
அருகினில் வைத்து
நீ அழகா இல்லை கனவினில் வரும் நீ அழகா
என்று பார்க்க வேண்டும்..♥


No comments:

Post a Comment