மின்சாரம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு நம்முடைய அன்றாட தேவைகளில் மின்சாரம் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால் தான் பல வழிகளிலும் மின்சாரத்தை உருவாக்க பலர் முயன்று கொண்டு இருக்கிறார்கள். அனல் மின்சாரம் , அணுமின்சாரம் , காற்றில் இருந்து , அலையில் இருந்து ,நீரில் இருந்து ,சூரிய ஒளியில் இருந்து ,கழிவுகளில் இருந்து இப்படி பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டிருக்க ,தற்பொழுது ” நீங்கள் நடந்தால் போதும் மின்சாரம் கிடைக்கும் என்று மின்சாரம் தயாரிக்கும் Tiles கண்டுபிடித்திருக்கிறார் லாரென்ஸ் என்ற ஆய்வாளர். அட! அதிகமாக மக்கள் கடக்கும் சாலை பகுதிகளில் இந்த Tiles பதிக்கப்படும் எனவும் மக்கள் இந்த Tiles மேல் ஏறிப்போவதினால் உண்டாகும் இயக்க ஆற்றல் மின்சார ஆற்றலாக மாற்றப்படும் எனவும் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்துள்ள ஆய்வாளர் சொல்லுகிறார்.
தற்பொழுது கிழக்கு லண்டனில் சோதனையில் இருக்கும் இந்த கண்டுபிடிப்பு 2012 ல் லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஒலிம்பிக் மைதானத்தையும் Westfield Stratford City ஷாப்பிங் பகுதியையும் இணைக்கும் சாலை பகுதியில் பொருத்தப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment