Thursday, 9 June 2011

நீயும் உன் நினைவுகளும்

உனக்கும் உன் நினைவுகளுக்கும்
ஏனடா இந்த முரண்பாடு?

நீயோ விலகி விலகி போகிறாய்
உன் நினைவுகளோ
என்னை விட்டு விலகுவதே இல்லை.!




பேசவே மறுக்கிறாய்
உன் நினைவுகளோ
உன்னை பற்றி மட்டுமே என்னை பேச வைக்கிறது.!

நீயோ உன் அன்பை மறைக்கிறாய்
உன் நினைவுகளோ
உன் அன்பை மட்டுமே எனக்கு நினைவூட்டுகிறது!

என்னவோ போ.. நீ விட்டாலும்
உன் நினைவுகள் என்னை விடுவதாய் இல்லை!!

உன்னை விட உன் நினைவுகளே
என்னை அதிகமாய் காதலிக்கின்றன!

No comments:

Post a Comment