(1)
நீ ஒரு பேர்முடா முக்கோணம்
உன்னைக்கடப்பவர்கள் எல்லோரும்
உன்னிலே விழுகிறார்கள்..
(2)
என் கண்கள் கூட
சித்திரம் வரைகிறது..
கனவில் உன் முகம்..
(3)
கொடுமை
சிலுவையை சுமப்பதை விட
காதலை சுமப்பது..
(4)
உன் உதட்டு ரேகைகள்
என் ஆயுளைச்சொல்கினறன..
எங்கே..ஒரு முறை என்னைப்பார்க்க விடேன்..
(5)
பாரதி காலத்தில்
அவள் எத்தனையாவது பிறப்பு?
அவனும் கவிதை படைத்தானே..
-நிந்தவூர் ஷிப்லி-
No comments:
Post a Comment