Thursday, 9 June 2011

மனிதர்களே மறந்துவிடுங்கள்






வார்த்தைகள் வாக்கியங்களாவது போல்
வழுக்கல்கள் எல்லாம் வாழ்க்கைப் பாடமாகும்
இதயங்கள் நொறுங்க அடிபட்டாலும்
எழுந்து நிற்பது தான் இயல்பானது!


துன்பங்கள் என்றும் தொடர்ந்து வராது
தொடர்ந்து நடை போட்டால்!
துயர்கள் எல்லாம் தூரம் சென்றுவிடும்
துவண்டு விடாமல் இருந்தால்!


எல்லைகளற்ற வானுக்கும்
இருக்கின்றன ஓசோன் எதிரிகள்
கள்ளமற்ற பிள்ளைகளுக்கும் உள்ளது
கவலைகள் நிறையவே!


எழுதப்படாத காகிதமாய் இற்றுப் போவதை விட
இருக்கட்டும் என்றும் அழியாத வரலாறாய் நம் வாழ்வு!
இனிப்பு மட்டும் தூவப்படவில்லை வாழ்வெனும் பாதையில்
இன்னல்களும் விதைக்கப்பட்டிருக்கின்றன இடையிடைய


களிப்பான கணங்களைக் கலைத்து விட்டுக்
கவலைகளை மட்டும் நெஞ்சு நிறைக்கும் மனிதர்கள்
கழற்றி விடுங்கள் துன்பம் என்ற விலங்கை!
காத்திருக்கின்றது மகிழ்ச்சியான எதிர்காலமொன்று!

No comments:

Post a Comment