திருச்சி-மணப்பாறை சாலையில் இருபதாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, வடசேரி. இந்த ஊரில் வீடுகளுக்கு கதவு இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக ஒரு வேப்ப மரம் இருக்கிறது!
''ஒவ்வொரு மாணவனையும் மரம் வளர்ப்புல ஈடுபடுத்தணும்னு ஆசைப்பட்டேன். பள்ளிக்கூடத்துல எல்லா மாணவர்களுக்கும் ஒரு அறிக்கை விட்டேன். 'அவங்கவங்க வீட்டுல ஒரு வேப்பங்கன்னை நட்டுவெச்சு பராமரிக்கணும். அப்படி செய்றவங்களுக்கு 5 மார்க் அதிகமா போடுவோம்’னு சொன்னேன். அதைக்கேட்டு, எல்லாப் பசங்களும் ஆர்வமா வேப்ப மரம் வளர்க்க ஆரம்பிச்சாங்க. கிட்டத்தட்ட வீட்டுக்கொரு மரம் வெச்சுட்டாங்க. நானும் வீடுகள்ல போய் பாத்துட்டு, நல்லா பராமரிக்குற பசங்களுக்கு மார்க் போட்டுருக்கேன்.
என்கிட்ட படிச்ச பசங்க பல பேர் நல்லா வளந்து முன்னேறியிருக்குற மாதிரி, அவங்க வெச்ச மரமும் வளர்ந்து வீட்டுக்கு நிழலையும், சுத்தமான காத்தையும் தந்துக்கிட்டிருக்கு'' எனப் பெருமிதப்பட்டார் அந்த ஊர் பள்ளிக்கூட முன்னாள் தலைமை ஆசிரியர் அண்ணாதுரை.
-பசுமை விகடன் இதழிலிருந்து ....
No comments:
Post a Comment