Friday, 17 February 2012

~ நாளைக்காவது பேசிடனும்


எப்பவும் போல லேட்டா எழுந்திருச்சு
கிழிச்சேங்க காலண்டரை- அப்புறம்
பேக்கரியில ஒரு  டீ, ஒரு தம்....

எப்டியோ தலையையும் காலையும் நனைச்சாச்சு
(குளிச்சாச்சு),
அழுக்குச்சட்டையை அயர்ன் பண்ணிப் போட்டுக்கிட்டு
அடிச்சு புடிச்சி பஸ் ஸ்டாப் போனா

அடச் சே அத்தனையும் வேஸ்ட்
ஒரு வேளை போயிருப்பாளோ?
எட்டின தூரம் முட்டும் பார்த்துப்புட்டேன்
ஏமாத்தம்தான் மிச்சம்

பஸ்சையும் காணோம்
ஆல்ரெடி அரை மணிநேரம் லேட்
பட்டுனு ஏனோ நான் திரும்ப
(நம்புங்க) பக்கத்தில அவள்

எப்படியாவது பேசிரலாமுன்னு
எத்தனிக்கையிலே
வந்துட்டான் எமன் - பஸ்

வழக்கம்போல ஏன் லேட்டுன்னு எம்.டி கேட்க
பஸ் லேட்டுன்னு பழைய பதிலையே நானும் சொல்ல
வசவு வாழ்த்தோட வேலையிலே மூழ்கியாச்சு
வேறேல்லாம் மற்ந்தாச்சு
நாளும் கரைஞ்சாச்சு

தூங்கறதுக்கு  முன்னாலே
தோணுச்சு  எனக்கு ஒன்னு
நாளைக்காவது பேசிடனும் அவள்கிட்ட.

No comments:

Post a Comment