Thursday, 12 January 2012

SUPER SINGER JUNIOR


-------------------------------
வளரும் தலைமுறை 
தவறிபோகிறது

ஆறு வயது குழந்தைக்கு 
மழலை மாறியதே அதிசயம்
பாடுவது பேரதிசயம்

முதல் வரியில் மோகம் இல்லையாம்
கடைசி வரியில் காதல் இல்லையாம் 
செப்பனிடுகிறார்கள் குரலரசர்கள் 

வள்ளுவனை வாசித்ததில்லை போலும் !

அறிவுக்கு மீறிய பேச்சு 
வயதுக்கு மீறிய உடை 
வளர்ச்சிக்கு மீறிய உணர்வு 

இசையில் இயற்பியல்...... 
நாட்டியத்தில் வேதியியல் .....

தணிக்கை செய்யபடவேண்டியவற்றை
தடையில்லாமல் கற்கிறார்கள்...

பெற்றோரின் பேராதரவுடன் 
சீரழிக்கப்படுகிரர்கள்.

1 comment:

  1. மழலைகளை குரங்காட்டி வதைப்பது போல் வதைக்கிறார்கள். பரிதாபமாக இருக்கிறது.

    ReplyDelete