Tuesday, 17 January 2012

துடித்து கொண்டு இருக்கிறது பூமி !


துன்பத்தின் வேர்களில்
தூக்குமாட்டிக் 
கொண்டிருக்கிறது !

மக்கள்
வேட்டையாடப்பட்டு
கொண்டு இருக்கிறார்கள்!
நாம் வெள்ளி திரையின் முன்
விசில் அடித்துக்கொண்டு
இருக்கிறோம்!

சுத்தம் சோறு போடுமாம் !
இன்று சோறின்றி
சுத்தமாய் ஏழையின் வயிறு !

இப்படியே போனால் நம்
எதிர்காலம் ?

நீஎன்ன செய்தாய்
இதுவரை இந்தப் புவிக்கு ?

பிறப்பு இறப்பு
உன் பெயர் கீழே
இரண்டு எண்கள்,
இதுதனா உன்முகவரி ?
இவ்வளவுதானா உன்சரித்திரம்?
இவை தானா உன்சரித்திரம் ?


உன் பெயர் நீ சம்பாதித்ததா?
உன் பிறப்பும் இறப்பும்
உன் சாதனையா ?

உன் ரத்தத்தைக் கிளறிப் பார்!
நீயும் ஒரு சமுத்திரம்
என்பதை அறிவாய்!

என்ன செய்யப்
போகிறோம் புவிக்கு ?

வளர்க்கக் கூடாது எல்லாம்
வளர்த்து விட்டோம் ,
மரம் தான் பாக்கி,
மரம் வளர்ப்போம் !

காட்டில் அதன் கண்கள்
களவாடப் பட்டது போதும் !,
இனி வீட்டில் வளர்ப்போம் !

வீடே இல்லை என்கிறீர்களா?
அப்படி எனில் கண்டிப்பாக
மரம் வளர்ப்போம் !
அதன் அடியிலாவது
குடி இருக்கலாம் !!

மரம் நடுவோம்
மரம் இல்லையேல்
காற்றை எங்கே போய்
கடன் கேட்பது ???

பாலிதீன் பைக்கு
பாடைகட்டி அனுப்புவோம்
முடியும் நம்மால்
பூமியின் கண்ணீருக்கு
முடிந்தவரை கைக்குட்டை கொடுக்க !

நம்மை கொஞ்சம்
செதுக்கிப் பார்ப்போம்
நாம் இழந்ததை
மீட்கப் பார்ப்போம் !
வாருங்கள் !!

No comments:

Post a Comment