Saturday, 7 January 2012
சுசீந்திரம் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னராட்சிகாலத்திலிருந்தே சீரும் சிறப்புமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது சுசீந்திரம் மார்கழித்திருவிழாவும் தேரோட்டமும். புதுமணத்தம்பதியர் கண்டிப்பாக சுசீந்திரம் தேரோட்டம் காணச்செல்லவேண்டுமென பண்டை காலத்தில் வற்புறுத்த...ப்பட்டதாம்.தேரோட்ட நாளில் தேர் ரத வீதியில் சுற்றி வந்து நிலைக்கு நின்றதை அறிந்த பின்னரே மன்னர் உணவருந்துவார்.
செல்போன் இல்லாத அந்தக் காலத்தில், சுசீந்திரம் தேரோட்டத்தன்று, தேர் நிலைக்கு நின்றதை, 60 கி.மீ. தொலைவில், திருவனந்தபுரத்திலிருக்கும் மன்னருக்குத் தெரிவிக்க, ஒவ்வொரு பர்லாங் தூரத்திலும் துப்பாக்கியுடன் சிப்பாய்களை நிற்கவைத்து, Relay Race போல ஒவ்வொரு துப்பாக்கியாக வெடிக்கச்செய்து, மன்னருக்கு செய்தியறிவிக்கப் பட்டது. இதைக் கேட்ட பின்னரே, அவர் தன் உண்ணாநோன்பை முடித்துக்கொள்வாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment