Monday, 26 December 2011

திருத்த முடியாத சிலர்



ஒருவர் அசந்து கண்ணை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டிருக்கும்போது மற்றவர் அவரைப் பார்த்து என்ன அசந்த தூக்கமா என்று கேட்பார். ஒருவேளை அவர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தால் தூங்குபவருக்கு எப்படிக் காது கேட்கும்? ஒருவேளை அவர் தூங்காமல் இருந்தால் இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் ?

ஒருவருக்கு அவர் வீட்டில் உள்ள தொலைபேசியில் ஒருவர் கூப்பிடுகிறார். கூப்பிட்ட உடனே கூப்பிட்டவரின் முதல் கேள்வி என்ன தெரியுமா? சார் எங்கே இருக்கீங்க.... இவர்
இருக்கிறாரே பெரிய கில்லாடி.... அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? நான் இப்போது பஸ் ஸ்டாப்பில் இருக்கிறேன் என்றார். ( எதாவது  புரிகிறதா .... )

ஒருவர் கீழ் தளத்தில் லிப்ட்டுக்காக காத்துகொண்டு மேல் மாடிக்கு போவதற்காக நின்றுகொண்டிருக்கும்போது, மற்றவர் அவரை பார்த்து கேட்ட கேள்வி " என்ன மேலே போறீங்களா
( இவர் மனதில் நினைத்துக்கொண்டார் ...... உங்களை மாதிரி ஆளை எல்லாம் ஒரே தடவையாக மேலே அனுப்பணும்" என்று )..

நம்ம நண்பன் காபி  ஷாப்பில் காபி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஒருவர் என்ன காபி சாப்பிடறீங்களா ( நம்ம நண்பர் நினைத்துக்கொண்டார் காபி ஷாப்பில் கள்ளா சாப்பிடமுடியும்.... )

எல்லாத்துக்கும் மேலே :
ஒருவர் இறந்துவிட்டார் .... அவர் வீட்டில் எல்லாரும் கூடி அழுது கொண்டிருக்கிறார்கள் ....அங்கே வந்த ஒருவர் கேட்ட முதல் கேள்வி செத்துபோயிட்டாரா?

No comments:

Post a Comment