சுகமாய் மேகம் சுமந்து
சுற்றித் திரிவதை விட்டு
என்னைச் சுண்டியிழுக்கவே
வந்தாயோ - மழையே!
மண்ணுடன்
பல்லாங்குழி!
என்னுடன்
பெண்மைத் தீண்டலா?
என்ன சொல்லி அனுப்பினான்
வருணன் - மண்ணுடன் காதல்
சொல்லவா - என்னுடன்
தேடல் கொள்ளவா?
வா! என் வீட்டு சன்னல்களில்
சிறையாய்க் கம்பிகள் இல்லை!
உனக்குத் தெரியும் - மழைக்கும்
சிறையிட விரும்பாதவன் நான்!
மழைக்குச் சிறையிட விரும்பாத
என் மனதோடு மாத்திரம் சொல்!
என்னைப்போல் எத்தனைபேருக்கு
ஒவ்வொரு மழையின் போதும்
மழைத்துளிகளுடன்
கவிதைகளையும்
கொண்டு வருகிறாய்?
No comments:
Post a Comment