பச்சைப் பட்டாணி சத்துக்கள் காய்கறிகளில் ஊட்டச் சத்து மிக்கது பச்சைப்பட்டாணி தான்.
பச்சைப் பட்டாணியில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தயாமின், நியாஸின், ரிபோப்ளோவின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் 'ஏ', வைட்டமின் 'பி', வைட்டமின் 'சி', நார்சத்துக்கள் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது.
பலன்கள்:
இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.
உயர் இரத்த அழுத்தம் குறையும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
செரிமான உறுப்புகள் நன்றாகும். உடல் வலிமை கூடும்.
கண்பார்வைத் திறன் மேம்படும்.
மனநோய் குணமடையும் இளமைத் தோற்றதோற்றம் தரும். ஆரோக்கியமாய் வாழலாம்
ஒரு எளிமையான ரெசிபி -
பச்சைப் பட்டாணி சூப் :
தேவையான பொருட்கள் பச்சைப் பட்டாணி - 200 கிராம்
கார்ன் ப்ளோர் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
பச்சைப் பட்டாணியை உப்பு சேர்த்து வேக வைக்கவும். கொஞ்சம் பச்சைப் பட்டாணியை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதியை ஒரு சிறிய கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும். கார்ன் ப்ளோருடன் கலந்து நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன்பின் தனியே வைத்துள்ள பட்டாணியைச் சேர்க்கவும். கொத்துமல்லியைச் தூவி, வெண்ணெயையும் கலந்து இறுதியில் மிளகுத்தூள் தூவவும். சுவையான பச்சைப் பட்டாணி சூப் ரெடி.
No comments:
Post a Comment