பனம் பணியாரம்
நன்கு பழுத்த பனம்பழம் 4 எடுத்து விறகு அடுப்பில் வைத்து சூடு காட்டிய
பின்னர் அதில் இருக்கும் மேல் கறுப்பு நிறத்தோலினை நீக்கிவிட்டு அதன்
சதைப்பகுதியில் இருக்கும் சாறினை சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு பிழிந்தோ
அல்லது குழம்பு கரண்டியினால் வளித்து எடுக்க வேண்டும்.
பின்னர்
அந்த பழச்சாற்றினை ஒரு சட்டியில் வைத்து நன்கு அடுப்பில் காய்ச்சும் போது
வெள்ளை நுரை போன்ற திரவம் மேல் வரும் அதை நீக்கிவிட்டு அந்த சாறினை நன்கு
தும்புகள் இல்லாதபடி வடிகட்ட வேண்டும்.
பின்னர் அதன் அளவைப்
பொறுத்து அதற்கு அளவான மைதா மாவு ( உதாரணம் 1/2 லீட்டர் சாற்றுக்கு 1 கிலோ
மைதா மாவும் நன்கு இனிப்பினை கொடுப்பதற்காக சிறிதளவு சக்கரை (சீனி) யும்
கலந்து சுவையை அதிகரிக்க உப்புச் சேர்த்து சிறிது நேரம் வைத்திருக்கவும்.
பின்னர் போண்டா சுடுவது போல சிறிது சிறிதாக கையின் பெரு விரலுக்கும் மற்ற
விரல்களுக்கும் உள்ள இடுக்கு வழியாக விட்டு வந்தால் சுவையான பனம் பனியாரம்
தயார்.
No comments:
Post a Comment