உலத்திக்குலை!
கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வளர்க்கப்படும் அலங்கார மரம் உலத்தி! பனைபோல உயரமாக வளரும் இந்த மரத்திலிருந்து பெறப்படும் உலத்தி ஓலை கோயில் விழாக்களில் அலங்கார தோரணமாக கட்டுவது உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் உலத்திக்குலை பார்க்கப்பார்க்க பரவசமாக இருக்கும். இளம் பச்சை நிறத்தில் பூக்கத்துவங்கி நன்கு முற்றும் போது கரும்பச்சை நிறமாக மாறும். உலத்திக்குலை சுமார் 15
அட...ி உயரம் வரை நீளமாக வளரும். பச்சை நிறத்தில் பெரிய வள்ளி அதையொட்டி சிறிது சிறிதாக உலத்திக்காய்கள். ,ஒரு குலை பருமனாக கிட்டத்தட்ட ஒருவருடம் வரை ஆகலாம். இங்குள்ள கோயில் திருவிழாக்கள், திருமணவீடுகளில் உலத்திக்குலை அலங்காரம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. ஒருகுலை 500 முதல் 1500 ரூபாய் வரை விலை போகும். ஒரு உலத்திக்குலையை இரண்டாக பிரித்தெடுத்து வீட்டின் இருபுறமும் அலங்காரத்துக்காக கட்டுவார்கள். (படத்தை டவுன்லோடு செய்து பெரிதாக்கிப்பாருங்கள்..உலத்திக்குலையின் அழகில் பிரமிப்பீர்கள்)
No comments:
Post a Comment