Saturday, 17 March 2012

உப்பு



Na (சோடியம் - Sodium) + Cl (குளோரின் Chloride) Na Cl இது இரண்டும் சேர்ந்தால் நம் வாழ்வின் முக்கியமான உணவு பொருள் உப்பு. உப்பு சப்பில்லா மேட்டர் என உப்பை சிலர் பழித்து பேசுவார்கள், ஆனால் உப்பில்லாமல் ஒரு வேளை உணவை கூட நாம் சாப்பிட முடியாது. வழக்கம் போல் கால மாற்றத்தில் நாம் நம்முடைய பாரம்பர்ய "கல் உப்பு" எனும் கடல் உப்பை மறந்து டேபிள் சால்ட்டுக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. 

இதில் போட்டி வேறு, எங்...க சால்ட் சும்மா மணல் மாதிரி ஃபிரியா வரும்னு சிலர் எங்கள் சால்ட்டில் ஐயோடின் உள்ளது, உங்கள் பிள்ளை நல்ல அறிவோடு வளர இது உதவும்னு ஒரு சைடு, இந்தியாவின் பாரம்பர்ய கம்பெனியான டாடா கூட இந்த உப்பு ம்ற்றும் இப்ப லேட்டஸ்ட்டா புரத, மினரல் சத்து அடங்கிய தண்ணீர் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

உப்பு வகைகள் மொத்தம் பண்ணிரன்டு வகை அதில் நான்கு தான் மிக ஃபேமஸ். அதில் இரண்டு தான் நாம் வீட்டின் உபயோகித்திற்க்கு முக்கிய பங்கு அது டேபிள் சால்ட், கல் உப்பு சரி டேபிள் சால்ட்டுக்கும் கல் உப்பு (Sea Salt) இது இரண்டிற்க்கு என்ன வித்தியாசம். டேபிள் சால்ட் எனும் உப்பை மன்னுக்கு கீழ் இருந்து தான் பல நாடுகளில் எடுக்கின்றனர். 


பிறகு அதை பிராசஸிங் செய்தால் தான் வெள்ளையாக மாறும், பிறகு கெமிக்கல் யூஸ் பண்ணினால் தான் சும்மா ஃப்ரியா ஒட்டாம இருக்கும், பின்பு ஆர்ட்டிஃபிசியல் ஐயோடின் கலந்து ஒரு கெமிக்கல் கலவையாகத்தான் டேபிள் சால்ட் வருகிறது. ஆனால் கடல் உப்புத்தான் இன்று வரை டாக்டர்கள் முதல் விஞ்சானிகள் வரை ரெகமென்ட் செய்யும் ஒரு அற்புதமான உப்பு. நம் தமிழ் நாட்டில் என்னை கேட்டால் கல் உப்பு ரொம்ப ஈஸியா கிடைக்கும் ஒரு பொருள் தெருவில் சைக்கிலின் இரு பக்கத்திலும் சாக்கில் வைத்து எடுத்து வந்து படி உப்பு சும்மா 2 ரூவா முதல் 3 ரூவா வரை. அப்புறம் பழைய பிளாஸ்டிக், கிழிந்த துணிகளுக்கு கூட இந்த உப்பு கொடுக்கபட்டது. 

இது இப்போது சூப்பர் மார்க்கெடில் பாக்கெட் சால்ட் எனும் கெமிக்கலைதான் நாம் உபயோகிக்கிறோம். கடல் உப்பு கடல் நீரை பாத்தி கட்டி நல்ல வெயிலில் காய்ந்து காய்ந்து பூமியின் சத்தோடு வரும் உப்பில் இயற்கையாய் ஐயோடின் மற்றும் சில நல்ல கெமிக்கல்கள் உள்ளது. இப்பல்லாம் ஃபாரினில் டேபிள் சால்ட் போய் சீசால்ட் தான் அதிக டாலர்கள் கொடுத்து உபயோகிக்கின்றனர். கல் உப்பு கடலில் இருந்து இயற்கையாய் தயாரிக்க ப்டுவதால் அதை பயன்படுத்தவும். கடல் தண்ணீர் எப்படி பட்ட புண்ணை கூட எளிமையாக ஆற்றும் ஒரு அற்புத நிவாரணி. டேபிள் சால்ட்டை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

சரி உப்பு ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் அதாவது 2000மில்லிகிராம் தான் லிமிட். மேக்ஸிமம் 2500மில்லிகிராம் தான் அலவுட். சர்க்கரையாய் பரவாயில்லை டயாபிட்டீஸ் தான் வரும் ஆனால் அதிக உப்பு ஒரு ஸ்லோ பாய்ஸன் ரத்த கொதிப்பு, ஸ்ட்ரோக், வாதம், பேரலைசிஸ், ஹார்ட் அட்டாக் மூளை சாவு போன்ற பல நோய்க்கு எமதர்மன் தான் இந்த உப்பு. நம்ம ஆட்கள் ஊறுகாய் அடிக்கடி இல்லையெனில் தினமும் சேர்ப்பார்கள் இது மிக மோசமான பழக்கம் ஒரு ஸ்பூன் ஊறுகாயில் 2500 மில்லிகிராம் அதாவது ஒரு நாள் கோட்டா ஓவர். ஃப்ரோசன் ஃபுட்ஸ் சுத்தமாக தவிருங்கள். பொருட்களை பதபடுத்துவதற்க்காக உப்பை அதிகம் சேர்ப்பார்கள். சிப்ஸ், பிராசஸ் ஃபுட்ஸ், சில ஜூஸ் கலவைகள், சில ரெடிமேட் ஃபுட்ஸ்களில் இந்த உப்பு ஒரு நாள் அளவை ஒரு வேளை உணவில் முடித்து விடுவார்கள். அந்த காலத்தில் சோறு சமைக்கும் போது உப்பு போட்டு சாதத்தை வடித்து விட்டால பின்பு குழம்பு, வெஞ்சனம் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். 


உப்பும் ஒரு பச்சை மிளகாயும் தனியாக கொடுப்பார்கள் து தேவையெனில் உப்யோகிப்பர் இல்லையெனில் யூஸ் பண்ணாமல் ஹெல்தியாக இருக்கின்றனர். ஆனால் நாமோ உப்பு விஷய்த்தில் கொஞ்சம் அதிகமாகி போனால் உடனே நீர் சேர்த்து சரி செய்வோம் அதனால் கலந்த உப்பின் அளவு குறைவ்து இல்லை டேஸ்ட் மற்றூம் தான் மாறுகிறது. கோஷர் உப்பு (kosher Salt) என இப்பொது ஹோட்டலில் உபயோகிக்கும் உப்பு இரைச்சியின் நாற்றத்தை உடனே எடுத்துவிடும், கொழுப்பை குறைக்கும் என கூறுவார்கள் ஆனால் துவும் பிராசஸ் சால்ட் தான்.

உப்பு இல்லா பண்டம் வேண்டுமானால் குப்பையிலே ஆனால் அதிக உப்பு எடுத்தால் நம் சுடுகாடு செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அளவான உப்பு அதுவும் 50 வயதிற்க்கு மேல் 1500 மில்லிகிராம் மேல் கூடவே கூடாது. உப்பிலாத பண்டமாக நிறைய சமையல்கள் இருக்கிறது அதை கற்று கொண்டு ஹெல்தியாக வாழுங்கள். மறக்காமல் கல் உப்பு தேடி பிடித்து வாங்குங்கள். எந்த அண்ணாச்சி கடை வாசலிலும் கடை மூடிய பிஅகு கூட அந்த சாக்கு மற்றும் அப்ப்டியே வெளியே இருக்கும் ஒரு அற்புத உணவு நம் ஆரோக்யித்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

No comments:

Post a Comment