Saturday, 10 March 2012

டாக்டர்கள் மன்னிக்க....


 

Join Only-for-tamil
வயித்து  வலியால   துடிச்சார்னு இவர தூக்கிட்டு வந்ததா சொன்னீங்க...இப்ப ஹார்ட் அட்டாக்னு சொல்றீங்களே....

உங்க கிளினிக்குக்குள்ள நுழையறத  பாத்ததுமே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருச்சு டாக்டர்.

Join Only-for-tamil

ஊசி போட்ட பிறகு ஏன் டாக்டர் ஸ்கேன் பண்ணனும்னு சொல்றீங்க.....?

உள்ள போன ஊசி இப்ப எங்க இருக்குன்னு பார்க்க ஆசையா இருக்கு
Join Only-for-tamil
சொத்து பத்து இத்தனை இருந்து என்ன பண்றது டாக்டர்? கிட்னில கல்லு இருக்கே....

கவலைபடாதீங்க எல்லாத்தையும் கரைச்சிடுவோம்...
Join Only-for-tamil

சிஸ்டர் நாளைக்கு ஆபரேஷன் பண்ணிக்கபோற அந்த பேசண்ட கொஞ்சம் கண்டிச்சு வைங்க..

ஏன் டாக்டர் என்னாச்சு?

இன்னைக்கு ஆபரேசன் பண்ணிக்க போற முனியம்மாவ பாத்து "நீ முன்னாலே போ... நான் பின்னாலே வாரேன்" னு பாடறார்..
Join Only-for-tamil
அதுதான் எக்ஸ்ரே படத்தை பார்த்து அன்னைக்கே ரிசல்ட் சொல்லிட்டேனே... திரும்ப ஏன் கொண்டு வந்த்திருக்கீங்க....?

இவ்ளோ செலவு பண்ணி எடுத்த படம் கலர்ல எடுக்கலன்னு என் மனைவி திட்டறா டாக்டர்

Join Only-for-tamil

என்ன டாக்டர் எனக்கு மூணு தரம் ஆபரேசன் பண்ணுணீங்களா?

யோவ்... மூணு தரம் மயக்க மருந்து குடுத்துட்டேன்... அஞ்சு நிமிசத்துல எந்திரிச்சு எந்திரிச்சு உக்காந்துட்டு இதே கேள்விய கேக்காதே....

Join Only-for-tamil

எதுக்கு டாக்டர் இத்தனை புத்தகம் ஆபரேசன் தியேட்டருக்கு  எடுத்துகிட்டு போறார்?

அதை படிச்சு படிச்சு பார்த்துதான் ஆபரேசன் பண்ணுவார்...

Join Only-for-tamil

*****************************************************************************************************************************************************
பின்குறிப்பு (இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்லன்னு மைன்ட் வாய்ஸ்ல  சொல்றது கேக்குது)
டாக்டர்கள் மன்னிக்க.... எதோ அறியாப்புள்ள தெரியாம ஜோக் அடிச்சிடுச்சுன்னு நெனச்சு சிரிச்சிட்டு போய்டணும்.. தேடி வந்து ஊசி போடக்கூடாது .. ஒகே?

No comments:

Post a Comment