Sunday, 27 November 2011

மனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?



  
எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

அவையாவன.....


எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)
நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.

சுய மதிப்பு .(self esteem)
நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் .


கடுமையாக உணர்வதில்லை.(sense of control)
பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை.கடிவாளத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக்கழிக்கப் படுவதில்லை.

நல்லதே நடக்கும் (optimism)
தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோக்குகிறார்
கள்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.


நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)
நேர்மறையாக சிந்திக்கிறார்
கள்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.

                                                                                                              
மேலே சொல்லப்பட்டவை நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள சொல்லப்பட்டவைதான்.இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கவும்,இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

1 comment:

  1. http://counselforany.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete