1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
இறப்பு என்பது முற்றுபுள்ளியா? - சுஜாதா
செத்த பின் என்ன என்று தெரிந்து கொள்வதால் யாருக்கு லாபம்? நான் செத்த பின் நானாக இருந்தால்தான் எனக்கு பிரயோசனம்; என் மூளை ,என் புத்தகங்கள் ,என் லேசான முதுகெரிச்சல் எல்லாம் இருந்தால்தான் நான் நானாக இருக்க முடியும் .செத்தாலும் ஆத்மா தொடர்ந்து இந்தோனேசியாவிலோ அல்லது வெனிஸ் நகரத்தில் ஒரு படகோட்டியாகவோ பிறப்பதில் அர்த்தமில்லை.
நான் நானாகவே தொடர வேண்டும் . அதற்கு என்னை அறிந்தவர்கள் வேண்டும். உறவினர்கள், என் வாசகர்கள் வேண்டும் . கட்டுரை அனுப்பினால் அதை பற்றி விமர்சிப்பவர்கள் வேண்டும். தமிழ் வேண்டும் . அதெல்லாம் இல்லாவிடில் உயிர் என்பது தொடர்ந்தால் என்ன , முடிந்தால் என்ன? எனவே சாவு என்பது கொஞ்சம் யோசித்து பார்த்தால் நம் நினைவுகளின் அழிவுதான்.
-சுஜாதா 'இறப்பு என்பது முற்றுபுள்ளியா?'
அமெரிக்க சம்பாத்தியம்-Writer Sujatha

அமெரிக்க சம்பாத்தியம்
பில் கேட்ஸ் மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் தலைவர். மைக்ரோ ஸாஃப்ட்தான் இன்றைய கணிப்பொறி யுகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. ஐ.பி.எம் போன்றவர்களின் சகாப்தம் முடிந்துபோய் மைக்ரோ ஸாஃப்ட்காரர்கள் அடுத்தது என்ன செய்யப் போகிறார்கள் என்றுதான் அனைவரும் வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிக எளிய ஆரம்பங்கள். டாஸ் என்னும் (DOS) ஆணைத் தொடரின் விற்பனையில் துவங்கிய மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் அதிர்ஷ்டம் ஏறுமுகமாகவே பத்து வருடங்கள் இருந்து பிரமிக்கத்தக்க நிலையில் இன்று வளர்ந்திருக்கிறது. இதன் அதிகப்படியான ஷேர்களைக் கைவசம் வைத்திருந்த பில் கேட்ஸ் உலகின் மிகுந்த பணக்காரர்களில் ஒருவர். எவ்வளவு பணக்காரர் என்கிற விவரம் இன்டர்நெட்டில் கிடைத்தது.
அமெரிக்காவில் கூடைப்பந்து (பாஸ்கெட் பால்) ஆட்டக்காரர்கள் நிறையப் பணம் பண்ணுகிறார்கள். அவர்களில் ஒருவர் மைக்கல் ஜார்டன். ஒரு ஆட்டத்துக்கு மூன்று லட்சம் டாலர் பண்ணுகிறார். அதாவது சுமார் முப்பது நிமிஷம் ஆடுகிறார் என்று கொண்டால் நிமிஷத்துக்குப் பத்தாயிரம் டாலர்; ஒரு நாளைக்கு அவர் சராசரியாக 1,78,100 டாலர் சம்பாதிக்கிறார். டி.வி.பார்க்கும் நேரத்தில் 3,710 டாலர். ஒரு முட்டை வேகவைத்துச் சாப்பிடும் நேரத்தில் 618 டாலர் வருமானம் வருகிறது.
அவர், தான் சம்பாதிக்கும் ஒரு டாலருக்கு ஒரு பைசாவில் பத்தில் ஒரு பாகம் உங்களுக்குத் தந்தால் வருஷத்துக்கு 65,000 டாலர் கிடைத்து சுகமாக நீங்கள் வாழலாம். 1997-ல் அவர் சம்பாதித்த பணம் இதுவரை வந்த எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளின் சம்பளத்தைக் கூட்டினால், அதைவிட அதிகம்!
நோவெர், நெட்வேர், ஹெட்ஸ் கேப் போன்ற நிறுவனங்களை எல்லாம் பில் கேட்ஸ்நினைத்த மாத்திரத்தில் சாப்பிட்டு விடுகிறார் அல்லது வாங்கி விடுகிறார். அவரைப் பெரும்பாலானவர்கள் வெறுக்கிறார்கள்; வேட்டைக்காரர் என்கிறார்கள்.
இம்மாதிரி கண்டமேனிக்குப் பணக்காரர்களாகும் சாத்தியம் அமெரிக்காவில்தான் இருக்கிறது. அதுவும் புதுப் பணக்காரர்கள். சுமார் பத்து வருஷத்தில் இந்த அளவுக்கு ஒரு தனிமனிதனால் உயர்வடைய முடிகிறது.
நம் இந்தியர்களில் யாரும் பில் கேட்ஸ் அளவுக்குப் பணம் பண்ண முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், இவர்கள் குறிக்கோள் எல்லாம் முதல் மில்லியன் டாலர் (பத்து லட்சம் டாலர்தான்). அனைவரும் வருஷத்துக்கு 40 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் டாலர் சம்பளம் வாங்கும் கோஷ்டியில் உள்ளார்கள்.
டாக்டர்கள் ஒரு லட்சத்துக்கு மேல் (வருஷம்தான்) சம்பாதிக்கிறார்கள். ஆனால் செலவும் அதிகம் (இன்ஷ§ரன்ஸ்). பெரும்பாலான அமெரிக்க இந்தியர்களின் குறிக்கோள் ஒரு வீடு, இரண்டு கார், அரை டஜன் க்ரெடிட் கார்டுகள், அமெரிக்காவில் பிறந்த ஒன்றிரண்டு குழந்தைகள், கொஞ்சகாலம் ஏதாவது ஒரு கம்பெனிக்கு உழைத்துவிட்டு சொந்தத்தில் ஒரு 'ஸ்டார்ட்-அப்' கம்பெனி துவங்குவதுதான்.
அமெரிக்காவில் குழந்தை பிறப்பது முக்கியம். அப்போதுதான் அவர்கள் அமெரிக்கப் பிரஜைகளாவார்கள். இவ்வாறு தம் குழந்தைகளை அமெரிக்கப் பிரஜைகளாக்கும்போது அவர்கள் இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் உரிமையைப் பறித்து விடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே இந்தியா திரும்பிச் செல்வது சில வருஷங்களில் மிகமிகச் சிரமமாகிறது.
இந்தக் குழந்தைகள் அமெரிக்காவில் வளர்ந்து தாய்மொழி தெரியாமல் ஆங்கிலம் மட்டும் தெரிந்து, வீட்டில் ஒரு கலாசாரம், வெளியே மற்றொரு கலாசாரம் என்கிற இருநிலையில் இந்திய மதிப்புகளுக்கும் அமெரிக்க மதிப்புகளுக்கும் உள்ள முரண்பாட்டின் இடையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த நாட்டின் கதவுகள் பிறக்கும்போதே மூடப்பட்டுவிட்டன.
இதைப் பிற்பாடு அறியும்போது அவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடியவில்லை. சிறுவர், சிறுமியராக இருக்கும்போது பெற்றோர்களுடனான அவர்களது இந்திய விஜயம் நம் நாட்டைப் பற்றி நல்ல அபிப்ராயத்தைத் தருவதில்லை. யாரைக் கண்டாலும் 'ஈஸ்
ஹி எ பெக்கர்?' என்று கேட்கிறார்கள். தாத்தா பாட்டியுடன் தொடர்பு அறுந்து விடுகிறது. அவர்கள் பேச்சு இவர்களுக்குப் புரிவதில்லை. தாய்மொழி? சுத்தம்!
வியட்நாம், சைனா போன்ற தேசங்களிலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்தவர்களுக்கும் இதே பிரச்னை இருக்கலாம். டி.வி.யில் அவர்களில் சிலரைப் பேட்டி காணும்போது என்னதான் அமெரிக்கப் பிரஜையாக இருந்தாலும் உள்ளத்தின் உள்ளே நான் ஒரு சீனன், வியட்நாமிஸ் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்தியர்கள் பெரும்பாலும் தம் அடையாளங்களை மறைக்கத்தான் விரும்புகிறார்கள். இங்கு அமெரிக்காவில் வாழும் எந்த இந்தியரைச் சந்தித்தாலும் இந்தியாவைப் பற்றி விசாரிக்கும்போது ஒரு ஏளனத் தொனி தெரிகிறது. இது ஏன் என்று விளங்கவில்லை.
இன்டர்நெட்டில் இந்தியத் திரைப்படங்களை விமர்சிப்பதிலோ, இந்தியா பற்றிய செய்திகளை அலசுவதிலோ, இந்த ஏளனத் தொனிதான் மிகையாக உள்ளது.
எப்படி இருக்கிறது லஞ்சம்? ஏர்ப்போட்டில் கக்கூசுகள் இப்போது சுத்தமாக உள்ளனவா? இப்போதெல்லாம் டெலிபோன் ஐந்து வருஷத்தில் கிடைக்கிறதாமே!
இந்த ஏளனம் ஒரு தற்காப்பு; தான் விட்டுவந்த நாட்டின் ஏழ்மையை நினைவு கொள்ளும்போது தாம் இங்கு நிறைய சம்பாதிப்பதில் லேசான குற்றஉணர்ச்சி இருக்கிறது.
இந்தக் குற்ற உணர்ச்சி குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அதிகமாக உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு இல்லை. இதன் காரணம் பிரசித்தமானதே. அவர்களுக்கு ஒரு இயக்க வேகமும் சொந்த நாட்டில் உரிமை இழப்பும் அதனால் ஏற்படும் ஏக்கமும் உள்ளது.
எத்தனைதான் சம்பாதித்தாலும் ஒருநாள் அம்பாரைக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ, கல்முனைக்கோ திரும்பிச் செல்ல வேண்டும் என்கிற ஏக்கம் உள்ளது.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் தாம் விரும்பித் தாய்நாட்டைத் துறந்தவர்கள். இவர்களிடம் என் வேண்டுகோள் ஒன்றுதான். நிறைய சம்பாதிக்கிறீர்கள், சந்தோஷம். ஆனால், ' உங்க ஊரில் இது இருக்கிறதா? கக்கூசு சுத்தமாக இருக்கிறதா?' என்றெல்லாம் கேட்டு வெறுப்பேற்றாதீர்கள்.
இந்தியர்கள் பலரை ஸான் ஜோஸே (San Jose), ஸாண்டா கிளாரா (Sanda clara), ஸ்டான்ஃபோர்டு (Stanford) போன்ற இடங்களில் சந்தித்தேன். அனைவரும் சுபிட்சமாக இருக்கிறார்கள். பாபி ரிக்கி என்கிற பஞ்சாபி சீக்கியர் இன்டர்நெட்டின் மூலம் மருத்துவமனைகளை இயக்கும் மென்பொருள் அமைக்கும் கம்பெனியை நடத்திவருகிறார்.
தன் மனபலம், கைக்காசு, நண்பர்களின் மூலதனம் இவைகளோடு துவக்கியுள்ள கம்பெனி எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் என்னும் நம்பிக்கையில் கடந்த கால சேமிப்புக்களையும் அனுபவத்தையும் முதலீடு செய்திருக்கிறார்.
இம்மாதிரி வாழ்க்கையில் தம் முப்பதுகளிலும், நாற்பதுகளிலும், அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்க இந்தியர்கள் இப்போது தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஆரக்கிள், இஸ்டெல் போன்ற நிறுவனங்களில் உயர் பதவியில் இருப்பதையும் பார்த்தேன்.
பொதுவாகவே ஐ.பி.எம் (I.B.M.), எச்.பி. (H.P) போன்ற நிறுவனங்களில் இந்தியர்களுக்கு ஒரு கண்ணாடி விட்டம் உள்ளது என்கிறார்கள். இதை Glass Ceiling என்கிறார்கள். இதற்கு மேல் அவர்களால் உயர முடியாது. ஆசைப்படவும் கூடாது.
இந்தக் கண்ணாடி விட்டம் தெரியும்போது பெரும்பாலான இந்தியர்கள் சொந்தமாகத் தொழில்புரியத் தீர்மானிக்கிறார்கள்.
பில் கேட்ஸ் பற்றி ஜோக்குகள் பல இன்டர்நெட்டில் கிடைக்கின்றன.
லோட்டஸ் கம்பெனி, மைக்ரோ ஸாஃப்ட் நிறுவனத்தின் பரம வைரி. அதன் சேர்மன் ஒருநாள் லிஃப்டில் நுழைந்தபோது, சதாம் ஹ§சேனையும், பில்கேட்ஸையும் பார்த்தாராம். அவர் கையில் ஒரு துப்பாக்கி, இரண்டு தோட்டா.
கேள்வி: யாரை முதலில் கொல்வார்?
விடை: பில் கேட்ஸை! இரண்டு முறை! (அத்தனை வெறுப்பு அவர் மேல்!)
திருசுஜாதாவைப் பற்றிய அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.