விரைவில் வந்து விடு.
எனக்காக.....,
இன்னும் விரைவில் வந்து விடு....!
இமைகள்
மூடித் திறக்கும்
நேரமெல்லாம்
எதிரில் வேண்டும் உன் முகம்....!!
நீயின்றி...,
இயங்கவில்லை
என் இதயத்தின் ஒரு பாதி....!
என் கண்கள் மட்டுமல்ல....,
கனவுகளும் கூட....,
ஏக்கத்தோடு காத்திருக்கிறது உனைக் காண!
உன் வரவை எதிர்பார்த்து,
கண்கள் வியர்த்து...,
சிந்தும் விழி நீரில்
நானே மூழ்கிடும் முன்,
வந்து விடு....எனக்காக
விரைவில் வந்து விடு....!
உன் வருகைதான்
இந்தப் பாலை பார்க்கும் தளிர்!
No comments:
Post a Comment