Thursday, 28 July 2011

காதலில் விழுந்த இதயம்!


நிலவைப் போல் உன் கண்கள்..
மின்னலைப் போல் உன் பார்வை..
கடல் அலையைப் போல் உன் நினைவு..
தென்றலுடன் உன் சுவாசம் எனக்குள் புகுந்து தித்திக்குது!
உன் நினைவில் என் உள்ளம் தள்ளாடுகிறது..
பூக்களுடன் உன் வாசம் என்னை வாட்டுகிறது..
உன் காதலில் என் நெஞ்சம் மயங்குகிறது..
காதலை மறுக்க நினைத்ததேன்..
சுவாசிக்கச் செய்தாய்..
பூக்களை திருட நினைத்தேன்..
ரசிக்க வைத்தாய்..
பொன் மொழிகளை மறக்க நினைத்தேன்..
உன்னை கவிதையாக வடிக்கச் செய்தாய்..
குயில்களின் பாடலை வெறுத்தேன்..
இன்று உன்னால் அதை ரசிக்கிறேன்..
என்னை ஒரு போதும் நான் ரசித்ததில்லை..
ஆனால்
உன்னை கண்ட பிறகு என்னை சுவாசிக்கிறேன்..
உன்னை நான் பார்க்கவில்லை என்றால் அது பொய்..
தினம் நான் உன்னை என் விழிகளில் பார்க்கிறேன்..
உறங்கும் போது கூட நான் தனிமையில் இல்லை..
ஏன் தெரியுமா?
கனவிலும் நான் உன்னுடன் வாழ்கிறேன்!

No comments:

Post a Comment