வழக்கொழிந்த தமிழ் சொற்கள்
நம் தமிழ்மொழி பிறமொழிகளின் பிறப்பிடமாகத் திகழ்கிறது . பன்னெடுங்காலமாய் பேசப்பட்டுவந்த பல மொழிகள் காலப்போக்கில் அழிவுற்றன. ஆனால் தன் கட்டான இலக்கண அமைப்பாலும் , இலக்கிய வளத்தாலும் இன்றும் வளமைக் குன்றாமல் வாழ்ந்துவருவது நம் தமிழ் மொழியே . தமிழில் பொருட்களுக்கு வழங்கும் பெயர்களை இருவகைகளாகப் பகுத்துள்ளனர். அவை இடுகுறிப்பெயர் மற்றும் காரணப்பெயர் என்பன. இதில் காரணப்பெயர் என்பது வடிவம் , பண்பு இவற்றினடிப்படையில் வழங்கப்படும் .
எடுத்துக்காட்டாக ; உருள்வது - உருளை (உச்சரிக்கும் போது ஒலியும் ஒத்துப்போவதைக் கவனிக்கவும் )
ஊறிய காய் , நா ஊறவைக்கும் காய் - ஊறுகாய்
பிறமொழிச்சொற்களை ஏற்பது நல்ல விடயம் தான் , ஆனால் அதற்கு அவசியப்படாமல் நம் தாய்மொழியில் சொல்வளம் நிறைந்துள்ளது. ஆங்கிலத்தில் waterfalls என்பதை நேரடியாகத் தமிழில் நீர்வீழ்ச்சி என்கின்றனர் , நீரின் வீழ்ச்சியல்ல தமிழின் எழுச்சியென எழுந்துநின்று ஆர்பாட்டமாய்ச் சிரிக்கிறது அருவி !
இப்படித்தான் சோறு என்பதும் , சோறு என்ற சொல்லை சாதம் (வடமொழி) ஆக்கிவிட்டோம் . சோறு என்பதில் பசியின் ருசி வெளிப்பட்டது..சோறு ருசித்த அளவுக்கு சாதம் ருசிக்கவில்லை , இன்னும் சிலர் rice ஆக்கிவிட்டோம் !!
இப்படியே சோற்றுக்குப் பக்கத்தில் இருந்த தொட்டுக்கையும் ,சோறுதின்ற வாய்க்கு கொஞ்சம் மாற்றுசுவை தந்த மறுமாத்தமும் , வெஞ்சனமும் side dish ஆகிவிட்டது . இதைக் கேட்கும்போது நம் தமிழ்ப்படங்களில் வரும் சில காட்சிகள் தான் மனதில் தோன்றுகிறது.
இணையத்தில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக வெகு அதிக பதிவர்கள் இருப்பது தமிழ் மொழியில் தான். மொழிவளர்ச்சிக்கு அவர்களும் காரணம் . சொல்லாய்வில் ஈடுபடும் அய்யா கார்த்திகைப்பாண்டியன் போன்றோருக்கு எனது நன்றிகள் .
தோழி அக்கினித்தமிழச்சியின் பதிவு வரவேற்கத்தக்கது.
அதில் , எதேஷ்டம் என்பது தமிழ்ச்சொல் இல்லையெனக் கருதுகிறேன் . அவ்வாறே ஔஷதம் என்பதை ஔடதம் எனக்கொள்ளலாம்.
பத்தாயம் என்பது நெல் சேமித்துவைக்கும் மரத்தாலான , அல்லது மண்ணால் கட்டப்பட்ட சிறு கிடங்கு .(ஆயம் என்பது ஒரு தமிழ் அளவை , பத்து ஆயம் அளவுள்ள கொள்ளளவைக் கொண்டது பத்தாயம் என்பர்.)
,நான் அறிந்ததைப் பகிர்ந்துக்கொண்டேன் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டவும் .
நட்புடன்..யாழினி..
No comments:
Post a Comment