Saturday, 11 June 2011
இனிய அத்து மீறல
இது காதலா..
இல்லை.
காதலுக்கு சில இலக்கணங்கள் உண்டு.
இது காமமா..
இல்லை.
காமத்திற்கு
பல தேவைகள் உண்டு.
பின் இது...
இது ஒரு இனிய அத்துமீறல்.
அறைந்து சாத்திய சாளரத்தின்
அடையாத இடைவெளியில்
வரும் ஒளி கீற்று போல...
மேய்ப்பவன் விரட்டும் போதும்
விடாமல் சில தளிர்களை
மென்று தின்று செல்லும்
ஆடுகளை போல....
கதவை மூடிய பின்னும்
சாவி துவாரத்தின் வழியே
வரும் மெல்லிய காற்று போல...
இது ஒரு இனிய அத்து மீறல்..
இங்கு உன் சம்மதம் எனக்கு எதற்கு..?
உன்னை சந்திக்க தானே
உன் அனுமதி தேவை..
உன்னை பற்றி சிந்திக்க கூடவா...
நினைவு மறக்கும் வரை.....
நீள் துயில் அழைக்கும் வரை.....
சில இனிய மாலை பொழுதுகளை
சேகரிக்க விரும்புகிறேன்.
முடிந்தால் உன்னோடு.....
இல்லையேல் உன் நினைவோடு.
(எழுதியவர் --அம்சப்பிரியா,தினம� ��ர்--வாரமலர்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment