Thursday, 9 June 2011

திகட்டாத முத்தம், விட்டுக் கொடுக்காத காதல்...





திகட்டாத முத்தம், விட்டுக் கொடுக்காத காதல்...


அவன் : உனக்கு பிடித்த பொருட்களுக்கெல்லாம் முத்தம் கொடுக்காதே...
அவள் : எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம் உன்னை ஞாபகப் படுத்துகிறதே நான் என்ன செய்யட்டும் சொல்...


அவள்: முத்தம் கொடுப்பதற்காகவே நீ என் கனவில் வருகிறாய்..
அவன்: உன் நிலை பரவாயில்லை உன் முத்தத்திற்க்காகவே எனக்குக் கனவு வருகிறது




அவன் : உன் பாதம் பட்ட இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஆசை தானடி..
அவள் : உன் முத்தம் பதிந்த இடமெல்லாம் நானாக மாறிவிட ஆசை தானடா


அவள் : முத்தம் கொடுத்து விட்டு நம் உதடுகள் பிரிகையில் நான்
வருந்துகின்றேன் நீயோ சிரிக்கிறாய் பைத்தியமாடி நீ ?
அவன்: என் சிரிப்பை நிறுத்துவதற்காகவாவது இன்னொரு முத்தம் கொடுக்க மாட்டாயா என்ன?
பைத்தியம் தான் உன் மீதும் உன் முத்தத்தின் மீதும்



அவன் : நேற்று இரவில், கனவில் உனக்கொரு முத்தம் கொடுத்தேன் கிடைத்ததா?
அவள் : ம் அதனால் தான் என் அறையில் பகல் முழுவதும் உன் வாசனையா?



அவள்: சத்தமிட்டு முத்தம் இடாதே...
அவன்: முத்தம் இடுகையில் சத்தமிடாதே




அவன் : நீ முத்தம் கொடுக்க நெருங்குகையிலே எனக்கு பித்து பிடிக்கிறதே ஏன் ?
அவள் : உனக்கே இப்படி என்றால் அதை வெட்கத்துடன்
வாங்கிக் கொள்ளும் எனக்கு எப்படி இருக்கும் யோசித்துப் பார்த்தாயா?


அவள் : பாதி முத்தத்தில் விலகி செல்லாதே நான் பைத்தியம் ஆகிவிடுகின்றேன்.
அவன் : அதனால் தான் விலகி செல்கின்றேன் முத்தத்தால் ஆன பைத்தியத்தை முத்தத்தாலே சரி செய்து விடுவேன்
என் முத்தப் பைத்தியமே..

No comments:

Post a Comment