Monday, 20 June 2011

கடைசி நாளொன்றில்



இடமொன்றில் ஊன்றிவிட்டு வரும்
விதையைப்போல்

விட்டுவிட முடியவில்லை
மனம் மறக்க விரும்பும்
நினைவுகளை!

பழகிய வீடென்றாலும்
நினைவு தடுமாறும்
நாளொன்றில் தலை தட்டிவிடும்
வாசற்படியைப்போல்
உட்கார வைத்துவிடுகிறது
அனுபவக் கசப்பு!


ரத்த நாளங்களாய்
உள்ளிறங்கிக்
கடைசி நாளொன்றில்
திருடிக் கொள்கிறது
புன்னகையை!

No comments:

Post a Comment