Thursday, 2 June 2011

இப்படிக்கு மரம் !!!





அனைவர்க்கும் ஆக்சிஜன் தருவேன்
குருவிகளுக்கு கூடு தருவேன்
மங்கைக்கு மலர் தருவேன்
மக்களுக்கு மருந்தாவேன்
விலங்குகளுக்கு இரையாவேன்
வெயிலுக்கு நிழலாவேன்
மண்ணுக்கு திடன் தருவேன்
கடிக்கக் காய் தருவேன்
இனிக்கக் கனி தருவேன்
செழிக்க மழை தருவேன்
கூடி நின்றால் காடாவேன்
தனித்து நின்றால் மரமாவேன்
என்னை நீங்கள்
வெட்டினாலும் விறகாவேன்..!!
வெட்டிக் கொள்ளுங்கள்
வேறொன்றும் சொல்ல மாட்டேன்
ஆனாலும் அக்றினையான
அடியேனின் அன்பு வேண்டுகோள்...!!!
வெட்டுங்கள் என்னை -
வெட்டிவிட்டு என்னை போல்
இன்னொருவனை வளருங்கள் !!!
இல்லையென்றால்
எங்கள் இனம் அழியும்
எங்களின் மரணத்திற்குப் பின்
காற்றுக்கு எங்கே போவீர்கள்
மழைக்கு எங்கே போவீர்கள்..!!
எங்களின் மரணத்திற்கு
அடுத்த நொடி
உங்களின் மரணம்
அதனால் சொல்லுகிறேன்
நீங்கள் வாழ
எங்களை வாழவிடுங்கள்..!!
இப்படிக்கு,
மனிதரை நேசிக்கும் மரம்...

எழுதியவர் :சலோப்ரியன்

No comments:

Post a Comment